பிரதான செய்திகள்

கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்.

கப்பம் பெரும் நோக்கில் வாரியபொல பிரதேசத்தில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன் இன்று காலை நிகவரட்டிய கடிகார கோபுரம் அருகில் விட்டுசென்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனையவர்களின் விபரங்களும் தெரியவந்துள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் செனரத்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் குறித்த இளைஞனை கடிகார கோபுரம் அருகில் விட்டுசென்றதாக அறிவித்ததாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த இளைஞன் தற்பொழுது நிகவரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு கோடி கப்பம் பெரும் நோக்கில் வாரியபொல பிரதேசத்தில் கடந்த 12ஆம் திகதி இரவு, முஸ்லிம் இளைஞன் மொஹமட் ஆசிக் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜூடீன் விவகாரம் – பொலிஸ் அதிகாரிக்கு பிணை இல்லை

wpengine

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம் – SriLakan President Anurakumara DIssanayaka

Editor

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

wpengine