எரிபொருளின் விலையை சுமார் 50% ஆல் உயர்த்த பங்களாதேஷ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
உக்ரைனில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலின் விலையை 130 டாக்கா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு டாக்கா சுமார் 3.80 இலங்கை ரூபாய்களாகும்.
வங்கதேசம் தற்போது அந்நிய செலாவணி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், கையிருப்பும் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது