எதிர்வரும் 25 ஆம் திகதியிலிருந்து QR முறைமை நடைமுறைப்படுத்த படுவதுடன் பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையும் பதிவு செய்யப்படும் என்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று (23) மாலை 4 மணி அளவில் QR முறைமை திருக்கேதீஸ்வரம் எரிபொருள் நிலையத்தில் பரீட்சார்த்தமாக பெற்றோல் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.