ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அண்மையில் சந்தித்த, அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று பதவிகளை கேட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதியை சந்தித்த இக்குழுவினர் தமக்கு விரைவில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாம் பதவி வகித்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகளை முடிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
தங்களால் கிராமப் பகுதிகளுக்குக் கூட செல்ல முடியாதுள்ளது என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அறியமுடிகிறது.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையை தொடர்பு கொண்டு இந்த முயற்சிக்கு உதவுமாறு கோரியுள்ளதாக முன்னாள் அமைச்சர்களிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் திகதி தொடர்பில் ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை என அறியமுடிகிறது.
இதேவேளை, பதவிகள் வழங்கப்படாமை குறித்து முன்னாள் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் விரக்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.