பிரதான செய்திகள்

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

கஞ்சா விவகாரத்தில் வழக்குத் தொடுக்கப்படாமல் கணவனை மீட்பதற்காக பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவிசாவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அப்பிரதேசத்தில் கஞ்சா விற்பனை செய்த நபரொருவரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.  சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தடுப்புக் காவல் உத்தரவு பெற்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசிய பெண்

இந்நிலையில் சந்தேக நபரின் மனைவி அவிசாவளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் தனது கணவனுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டாம் என்றும் அதற்காக இரண்டரை லட்சம் ரூபா லஞ்சம் வழங்குவதாகவும் பேரம் பேசியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு இணங்க இலஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து குறித்த பெண் லஞ்சம் வழங்கும் ​போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலஞ்ச, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.

Related posts

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்துதான் பாதாள உலகம் இயங்கியது.

Maash

பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்

wpengine

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக பாரிய கையெழுத்து வேட்டை

wpengine