பிரதான செய்திகள்

எரிபொருள் மோசடிகளை தடுக்க தொலைபேசி முறை அறிமுகம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் வகையில் புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை பொலிஸ் திணைக்களத்தின் கணினிப் பிரிவு உருவாக்கியுள்ளது.

வாகனம் ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருள் நிரப்பும் போது, ​​அதன் பதிவு எண் சம்பந்தப்பட்ட செயலியில் உள்ளிடப்படும்.

இதனூடாக குறித்த வாகனம் எரிபொருளை பெற்றுக் கொண்ட தகவல்களை ஏனைய எரிவாயு நிலைய உரிமையாளர்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த செயலி பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

Related posts

றிஷாட் தொலைபேசி விவகாரம்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

wpengine

மலையக தமிழ் கட்சிகளை இணைக்க இந்தியா பல சதி திட்டம்!

wpengine

500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும்.மக்கள் வாழ வேண்டும்- சஜித்

wpengine