Breaking
Mon. Nov 25th, 2024

ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ் வழக்கு விசாரணை நேற்று (25) இடம்பெற்றது.

கடந்த (10)ம் திகதி இரவு ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு,உறவினரின் வீடு, ஹோட்டல், கடைகள் மற்றும் ஆடைத்தொழிற்சாலை என்பன உடைத்து சேதமாக்கப்பட்டதுடன், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

பொலிஸார் தீவிர விசாரணை

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய இரு மாணவர்கள் உட்பட 15 பேரை பொலிஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட 15 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு மாணவர்களும் க.பொ.சாதாரண பரீட்சைக்கு தோற்ற உள்ளதால் அவர்களுக்கு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி மன்றில் நகர்த்தல் பத்திரம் முன்வைத்ததையடுத்து இரு மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 பேரின் வழக்கு விசாரணைக்காக நேற்று புதன்கிழமை (25) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் வழக்கு விசாரணக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 8ம் திகதிவரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *