Breaking
Sun. Nov 24th, 2024

மன்/தலைமன்னார் துறை றோ.க.த.க பாடசாலையின் வளர்ச்சிக்காக உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 12/05/2016 பாடசாலை மண்டபத்தில் 12.00 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான் ஆகியோர் கலந்து கொண்டனர், இதன்போது வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சரின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையில் (CBG) இருந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக பாவனைக்கான அலுமாரிகள், ஒலிபெருக்கி சாதனங்கள், Multimedia Projector மற்றும் இதர பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.ad47269b-270d-4c75-9058-fa970d85f857

அப்பொழுது உரை நிகழ்த்திய வடமாகாண கல்வி அமைச்சர் பாடசாலையில் சில கட்டிட குறைபாடுகள் இருப்பதை உணர்ந்து அவற்றை கட்டிக்கொடுப்பதற்கான உறுதிமொழிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய வடமாகாண  மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் தனது உரையில் இப்பாடசாலையை தற்போதைய அதிபர் 2010 ஆம் ஆண்டு பொறுப்பேற்கும் போது 17 மாணவர்களை கொண்டதாகவும் தற்பொழுது178 மாணவர்களை கொண்டதாக காணப்படுவதாகவும் அதிபர், ஆசிரியர்களினது கடின உழைப்பினால் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதன்மை இடங்களை பெற்றுள்ளதையும் கடந்த 5 வருடங்களில் இப்பாடசாலை குறித்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக அறிய முடிவதாகவும் இதற்க்கு அதிபரின் அற்பணிப்பும் ஆசிரியர்களினதும் பெற்றோர்களினதும் ஒத்துழைப்பே காரணம் எனவும் தெரிவித்தார்.81788477-9c19-48fe-85d1-66c2afd8531b

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *