பிரதான செய்திகள்

அமைதியான முறையில் போராடும் வரையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது-சவேந்திர சில்வா

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறும் வழியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மக்கள் அமைதியாக இருக்கும் வரையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அனைவரும்  அதனை மதித்து வாழ வேண்டும். அமைதியான முறையில் போராடும் வரையில் எந்த பிரச்சினையும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அமைதியான முறையில் இருந்து  வன்முறை நிலைக்கு மாறினால் பிரச்சினை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

Related posts

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் ,தீவிர வாதம் புகுந்திருப்பதாக பிரச்சாரம்!

wpengine

ராஜபக்ஷ அரசு சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை அரசு இழக்கநேரிடும்.

wpengine

ரஞ்சனின் வெற்றிடத்தை நிரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் யார்!

Editor