Breaking
Mon. Nov 25th, 2024
(அஷ்ரப் ஏ சமத்)
நாடு முழுவதும் வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால்  எழுச்சிக் கிராமங்கள் நிர்மாணிக்கப்படும் திட்டத்தின் கீழ்   மட்டக்களப்பு மையிலான்பவலி பிரதேசத்தில் 6வது ” காமாட்ச்சி  எழுச்சிக் கிராமம்” ஞாயிற்றுக் கிழமை 15.05.2016ல் காலை 10.00 மணிக்கு  மக்களிடம் கையளிக்கப்படும்.

இவ் வீடமைப்புத்தி்ட்டத்தினை அமைச்சா் சஜித் பிரேமதாச  பிரதியமைச்சா் அமீா் அலி  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களது பங்கு பற்றுதலோடு  இத் வீடமைப்பு கிராமம் திறந்து வைக்கப்படும்.  இங்கு 25 வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிககப்ப்ட்டுள்ளது.  இங்கு வீடுகள் நிர்மாணிக்கவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 போ்ச் காணிகள் இலவசமாக வழங்கப்பட்டது.  இத் திட்டம்  100 நாள் திட்டத்தின் கீழ் நிர் மாணிகக்ப்பட்டது.  பாதை, குடி நீா்.மிண்சார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு மேலதிகமாக நாடு முழுவலுதும்  200 எழுச்சிக் கிராமங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மேலும் சில கிராமங்கள் நிர்மாணிக்க வேண்டியுள்ளது.  தமிழ் முஸ்லீம் பிரதேசங்களில்  அரச காணிகள் அறவே  இல்லாமையினால் இத்திட்டம உரிய காலத்திற்குள் அமுல் படுத்த முடியாமல் உள்ளது. 49ec088c-79d9-4599-834c-b69889f5a334
எழுச்சிக் கிராமங்கள்   1 வது முல்லைத்தீவிலும், 2வது ஹம்பாந்தோட்டை  3வது கண்டி, 4வது கேகாலை, 5வது அம்பாறையிலும் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளன. 6வது ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலும்  7வது கிராமம் (16ஆம் திகதி ) திங்கட கிழமை திருகோணமலையிலும் திறந்து வைக்கப்பட்ட உள்ளது. c2e61f8b-c941-44d4-b4f9-ac636cdae3b4
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *