உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

14 வயது சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ரஷ்யா படை வீரர்கள்

உக்ரைனில் 5 ரஷ்ய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 14 வயது சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா வசிலெங்கோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவலில் புச்சாவில் 14 வயது சிறுமி 5 ரஷ்ய வீரர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இர்பின் நகரில் 20 வயதான இளம்பெண் மூன்று ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டுள்ளார். இதே போன்ற ஒரு கொடூரம் 11 வயது சிறுவனுக்கு அவன் தாயார் கண்முன்னே புச்சாவில் நடந்துள்ளது.

சம்பவத்தின் போது நாற்காலியில் சிறுவனின் தாயார் கட்டி வைக்கப்பட்டிருந்தார். இதற்கெல்லாம் நோட்டோ மற்றும் ஐ.நா உறுப்பு நாடுகளே பொறுப்பு என பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா உக்ரைனில் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Related posts

தொலைக்காட்சியில் பொழுதை கழித்து வாழ்வைச் சீரழிக்காதீர்! அமைச்சர் றிசாத்

wpengine

ஹக்கீமின் பிழையினை விமர்சனம் செய்யும் ஹரீஸ்

wpengine

ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்.

wpengine