பிரதான செய்திகள்

“ஜனாதிபதி கோட்டாபய அரசுக்கு எதிராக பிரேரணை! முகங்கொடுக்கத் தயார்- அலி

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்கத் தயார்.” என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர்கள் பதவி விலகி, அமைச்சுப் பொறுப்புகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை எதிரணி ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் 113 ஐக் காண்பித்து ஆட்சியைப் பொறுப்பேற்கச் சொன்னோம்.

அதற்கு எதிரணி தயார் இல்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது அரசியல் இலாபம் கொண்டது. அதனை எதிர்கொள்வோம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிராக மனு

Maash

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine