பிரதான செய்திகள்

மைத்திரிக்கு வீடு வழங்கவில்லை! பழைய வீட்டில் இருந்து வெளியோற்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வெளியேற தீர்மானித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்த தடை விதித்து, உயர் நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றத்தின் இந்த முடிவை மதித்து உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளர்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இதனால், மலலசேகர மாவத்தை இல்லத்தில் இருந்து அவர் எந்த வீட்டுக்கு செல்ல போகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Related posts

முசலி பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கருத்தரங்கு

wpengine

ஞாயிறு தாக்குதல்! தனது பெயரை வெளியிட வேண்டாம் மௌலவி சாட்சியம்

wpengine

தலைவர், உப தலைவர் நியமனத்தின் போது ஊழல் மோசடிகள்

wpengine