பிரதான செய்திகள்

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் கட்சி பொறுப்பல்ல

ஊடகப்பிரிவு-

கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல என்று அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


கட்சியின் கட்டுப்பாடுகளையும், கொள்கைகளையும் மீறி செயற்பட்டதனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஷாரப் முதுநபீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரும், ஜனாதிபதி தலைமையில் இன்று (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை’ என்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி, அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கட்சியிலிருந்தும், உறுப்புரிமையிலிருந்தும், கட்சியின் சகல பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, இவர்கள் கட்சியின் பெயரை சொல்லிக்கொண்டு, கட்சியின் சார்பாக சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எஸ்.சுபைர்தீன்,
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Related posts

மாவீரர் தினத்தை தடுக்கும் கோரிக்கை மன்னார் நீதி மன்றத்தில் நிராகரிப்பு

wpengine

நாகப்பட்டினம் – காங்கேசன் துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Editor

“க்றீன் கார்ட்” லொட்டரிக்கு ஆப்பு வைத்த டொனால்ட் ட்ரம்ப்

wpengine