உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தி உள்ளன.

அதேநேரம் நிலை சீரானதும் மீண்டும் சேவை வழங்கப்படும் என மாஸ்டர்கார்டு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதாக விசா நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Related posts

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine

பால்மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை

wpengine

போலீஸ் நிலைய பெயர் பலகையில் சிறுநீர் கழித்த போலீஸ் அதிகாரி அதிரடி கைது . .!

Maash