மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அல்லது கட்சியினர் எவருக்காது சிறு கீறல் சேதத்தை ஏற்படுத்தினாலும் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என அந்த முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா (Tiwin Silva) தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யும் அரசாங்கம் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும்.
அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடந்த மாநாட்டுக்கு வந்து தாக்குதல் நடத்தி முயற்சித்தவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் அவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலங்களை மாத்திரம் பதிவு செய்துள்ளனர். கைது செய்யவில்லை. இதன் மூலம் இந்த தாக்குதல் முயற்சியின் பின்னர் பலமிக்க சக்தி இருப்பது தெரிகிறது எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.