Breaking
Fri. Nov 22nd, 2024

மாவட்ட ஊடகப்பிரிவு

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அணிவகுப்புடன் இன்று (4) காலை 7.30 மணி அளவில் ஆரம்பமானது.

இதன்போது அரசாங்க அதிபர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தேச விடுதலைக்காக போராடி உயிர் நீத்த அனைவருக்கும் இரண்டு நிமிடநேர அமைதி பிரார்த்தனை நடைபெற்றது மேலும் சமாதான புறா ஐதரசன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன.

தொடர்ந்து சர்வ மதத்தை பிரதிபலிக்கின்ற மதகுருமார்களின் ஆசியுரை நிகழ்த்தப்பட்டு இன நல்லிணக்கத்துக்கான நடனம் அரங்கேற்றப்பட்டது.
மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான நந்தினி ஸ்ரான்லி டிமேல் அவர்கள் சுதந்திர தின செய்தியினை நிகழ்த்தியதனை தொடர்ந்து சர்வமத தலைவர் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு சுதந்திர தின நினைவு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து இறுதியாக மாவட்ட செயல வளாகத்தினுள் சுதந்திர தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி,எஸ் எஸ் பி(senior superintendent of police), மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காளர், சமூர்த்தி பணிப்பாளர், விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *