பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டம்.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், சுமார் 5W சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1500 ரூபா வழங்கப்படும். அவர்கள் 10 வருடங்களின் பின்னர் 10,000 ரூபாவை பெற்றுக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கமைய, ஆரம்ப கட்டத்தில் 14,000 வீடுகளுக்கு சூரியக்கலங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கடைசி இடம்

wpengine

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

wpengine

மன்னார் பள்ளிமுனை ஓடை ஆளப்படுத்தும் செயற்திட்டம் வைபவரீதியா திறந்து வைக்கப்பட்டது.

Maash