பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சவுதி அரேபியாவின் நிதி ஒதுக்கீட்டில் முசலியில் பள்ளிவாசல் பலகையினை திறந்த மஸ்தான் எம்.பி.

முசலி பிச்சைவாணிப நெடுங்குளம் (அளக்கட்டு) பகுதியில் சவுதி நாட்டு தனவந்தர் ஒருவரின் நிதிப் பங்களிப்போடு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உமர் இப்னு ஹத்தாப் ஜும்மா பள்ளிவாசல் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று(14) திறந்து வைக்கப்பட்டதுடன் ஜும்மா தொழுகையும் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த மஸ்ஜிதின் வளாகத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினரினால் 10இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலசலக் கூட தொகுதியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள்,ஊர் ஜமாத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு.

Related posts

இணையம் ஊடாக பாலியல் தொழில்! வெளிநாட்டு பெண்கள் கைது.

wpengine

மன்னாரில் கொரோனா தொடர்பில் பதில் அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம்.முகக்கவசம் அணியவும்

wpengine

சிவப்பு சீனி விலையில் மாற்றம்!

Editor