பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இரண்டு சிறுமிகளை வவுனியாவில் ஏமாற்றிய எதிர்கட்சி தலைவர் சஜித்

வவுனியாவில் சஜித்தின் கூட்டத்தில் நடனமாடச்சென்ற இரு சிறுமிகள் ஏமாற்றமடைந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன் பொதுமக்களுடனான அரசியல் நிகழ்வொன்று மாலை 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், எதிர்கட்சி தலைவர் உரையாற்றி முடிந்ததும் கூட்டம் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து, வெலிஓயா பகுதியில் இடம்பெறும் மற்றொரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார். பொது மக்களும் கலைந்து சென்றுவிட்டனர்.

குறித்த நிகழ்வில் நடனமாடுவதற்காக இரு சிறுமிகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் கூட்டம் முடிவடைந்து அனைவரும் சென்றமையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அவர்களது மனம் புண்படாத வண்ணம், அவர்களது நடன நிகழ்வு ஒருசிலருடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

-வவுனியா தீபன்-

Related posts

இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் .

Maash

அஷ்ரபின் தங்கையின் மகன் முஹம்மத் காலமானார்! உயிரை பரித்த “ஹியர்போன்”

wpengine

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விளையாட்டுக் கழகத்தினருக்கு சீருடை வழங்கி வைத்தார்.

wpengine