பிரதான செய்திகள்

பிரேமஜயந்தவுக்கு எதிராக கட்சி, ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் கேள்விக்குறியதாகியுள்ளது.

பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக கட்சி, ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொதுஜன பெரமுனவின் மத்தியக்குழு, இந்த ஒழுங்காற்று நடவடிக்கை குறித்து ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமக்கு தனித்து முடிவெடுக்கமுடியாது என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சரான சுசில் பிரேமஜயந்த, டொலர் பிரச்சினை மற்றும் அரசாங்கத்தை விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதியினால் கடந்த செவ்வாய்க்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவே தொலைபேசியில் அழைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை பதவி நீக்கியதை சுசில் பிரேமஜயந்தவுக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts

அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

மங்கலராம விகாரதிபதி மட்டக்களப்பில் இருந்து அகற்ற வேண்டும்- சீ.யோகேஸ்வரன் (பா.உ)

wpengine

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

wpengine