பிரதான செய்திகள்

நீரிழிவு நோயும் யோகாசனமும்     நூல் வெளீயிட்டு விழா

நீரிழிவு நோயும் யோகாசனமும்     நூல் வெளீயிட்டு விழா
வைத்திய கலாநிதி திருமதி சரஸ்வதி பிரபாகரன் அவர்களின் நீரிழிவு நோயும் யோகாசனமும் (மருத்துவ நூல்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் காலை9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.


நிகழ்வொழுங்கில் மங்கள விளக்கேற்றலும் அதனைத்தொடர்ந்து தமிழ்வாழ்த்தினை திருமதி த.சிவசோதி அவர்களும் ஆசியுரையினை சிவஶ்ரீ நா.பிரபாகர குருக்களும் வாழ்த்துரையினை வைத்திய கலாநிதி ப.சத்தியநாதன் அவர்களும் வெளியீட்டுரையினை அருள்நிதி எஸ்.சந்திரன் அவர்களும் ஆய்வுரையினை கலாபூசணம் மேழிக்குமரன் அவர்களும் ஏற்புரையையும் நன்றியுரையையும் வைத்திய கலாநிதி திருமதி சரஸ்வதி பிரபாகரனும் நிகழ்த்தவுள்ளனர்.

Related posts

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

wpengine

தேசபந்து தென்னகோன் குற்றவாளி : பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை!!!

Maash

இலங்கை உட்பட பல நாடுகள் மீது டிரம்ப் அறிவித்த வரிகள் ,90 நாட்களுக்கு இடைநிறுத்தம் .

Maash