பிரதான செய்திகள்

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானின் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது பூதவுடல் இன்று (07) அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார கடந்த வாரம், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

உள்ளுார் அரசியலில் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளையும் சமப்படுத்திக்கொண்டு நகர்வு

wpengine