பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இல்லாமல், ஏன் இந்தியாவுக்கு சென்றார்.

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் இருப்பு குறித்து இன்னும் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரத்தில் மத்திய வங்கியில் இருக்கும் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பெறுமதி குறித்து தகவல் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டபோதும், இன்னும் அது வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

நிதியமைப்பை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு நாடாளுமன்றம் என்பதால், வெளிநாட்டு நாணய ஒதுக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்.

இதனை விடுத்து இந்திய அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்

இதேவேளை பாதீட்டு விவாதங்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இல்லாமல், ஏன் இந்தியாவுக்கு சென்றார் என்று ரணில் விக்கிமசிங்க கேள்வி எழுப்பினார்.

Related posts

பாசிச புலிகளினால் கொலைசெய்யப்பட்ட ஷரீப் அலியின் நுால்வெளியீடு ஓட்டமாவடியில்

wpengine

கணவன் சுட்டுக் கொலை! வழக்கில் சாட்சியான கிளி (வீடியோ)

wpengine

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த

wpengine