மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரச தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கோவிட்-19 விதிகளை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதே குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் ஜனாதிபதி வின் மைன்ட்டும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு அந்நாட்டு இராணுவம் ஆங் சான் சூகிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஒரு பகுதி வழக்குகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், இராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.