வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே வாகனங்களின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வருடத்தில் நான்காவது தடவையாக வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை மாருதி சுஸுகி மற்றும் மஹேந்திரா நிறுவனங்களின் தலைவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, வாகன விலை உயர்வு, சந்தையில் வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வீஜய் நக்ரா தெரிவித்துள்ளார்.
கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகள் போன்ற பிரபலமான வாகனங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.