Breaking
Sun. Nov 24th, 2024

Englishஉலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000 ஆம் ஆண்டு 156 இலட்சம் கோடி டொலராக இருந்தது. அது 2020 ஆம் ஆண்டில் 514 இலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக இருந்துள்ளது.

இதன் மூலம் சீனாவின் சொத்து மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது. உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக சீனா ஆவதற்கு முன்பு 2000 ஆம் ஆண்டில் அந்நாட்டின் சொத்து மதிப்பு 7 இலட்சம் கோடி டொலராக இருந்தது.

202 இல் சீனாவின் சொத்து மதிப்பு 120 இலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதனால் உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 இலட்சம் கோடி டொலராக உள்ளது. உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்திற்கு மேல் 10 நாடுகளிடம் மட்டுமே உள்ளது.

மேலும், உலகின் பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா ஆகியவற்றின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு மடங்கு 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது.

உலகின் சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மற்றவைகள் உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவு சார் சொத்துக்கள், காப்புரிமைகளில் உள்ளது.

15 Nov, 2021 | 09:23 PMஅரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாட சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அம

தொலைநகல் : +94 114 792 733contact@newsfirst.lk

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *