பிரதான செய்திகள்

றிஷாட் பதியுதீன் துரோகிகள் விடயத்தில் சிறந்த முடிவை எடுப்பீர்களா?

அரசியல் அறிமுகமில்லா முகங்களை அரசியல் எனும் கூடத்தில் பயிற்றுவித்து தேர்தல் எனும் பரீட்சையில் சித்தியடைய வைத்து அரசியல் எனும் முகவரியை பெற்றுக்கொடுத்த தலைவன் தனியாளாக பாரளுமன்றத்தில் தனித்திருப்பதை பார்க்கையில் மன வேதனையாக உள்ளது!
படைத்து ரப்பு போதுமானவன்..

பல துரோகிகளுக்கு அரசியல் முகவரி பெற்றுக்கொடுத்த தலைவன் துரோகிகளை போல் வீழ்ந்த வரலாறு இல்லை! ஆனால் துரோகிகள் அனாதையாக ஆன வரலாறே உள்ளது.

ஆற்றை கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆற்றை கடந்த பின் நீ யாரோ! நான் யாரோ..
இவ்வாறுதான் சில துரோகிகளின் நடத்தைகள் அமைத்துள்ளது – இதை யாரும் சொல்லவில்லை மக்கள் நன்கறிந்தனர் துரோகிகளின் உண்மை முகத்தை.

புனித பள்ளியில் வைத்து சத்தியமிட்டு கூரிய சத்திய வார்த்தைகளை மறந்து அவை அனைத்தும் Edit செய்யப்பட்டது என்று வாய் கூசாமல் சொல்வதை பார்க்கையில் கேலிக்கூத்தாக உள்ளது!

👉🏻பணம் என்றால் பினமும் தலைவிரித்து ஆடும் என்று சும்மாவா பெரியோர்கள் கூறினார்கள்.
பணமும்,பதவியும் என்றால் புனித பள்ளியில் வைத்து வெள்ளை தொப்பி போட்டு கூறிய வார்த்தைகளும் காற்றில் கரைந்து சென்றுவிடும்!

தலைவா,
நம்பிக்கை வைத்தவன் துரோகம் செய்து விட்டானே என்று புலம்பாதே..
நீ வைத்த நம்பிக்கை தான் உனக்கு துரோகியை அடையாளம் காட்டியது தலைவா!

உனக்கு துரோகம் செய்து விட்டு போனவர்கள் உன்னிடம் ஆயிரம்
முறை திரும்பி வரலாம் ஆனால் ஒருமுறை கூட திருந்தி
வரப்போவதில்லை என்பதை கட்சியும் தலைவரும் நன்கறிந்து கொள்ள வேண்டும்!

குற்றத்தை மன்னித்து விடலாம்
ஆனால் துரோகத்தை
மன்னித்து விடாதே தலைவா.

துரோகிகள் விடயத்தில் சிறந்த தீர்மானம் ஒன்றை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உண்மை போராளிகள் ஏங்கி தவம் கிடக்கின்றனர்.

🎯நான்
சப்ரான் பதூர்தீன்

Related posts

கல்முனை பிரதேச மக்களை சந்தித்து கலந்துறையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

அமெரிக்கா பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால்வை சந்தித்த அமைச்சர் றிசாட் (படம்)

wpengine

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!

Editor