பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (நவம்பர் 10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்புக்குள்”இருந்த “கப்ரு” குழி நம்பிக்கை!

wpengine

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Maash

பாசிக்குடாவில் விடுதி ஒன்றை முற்றுகையிட்டு ,பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது .

Maash