Breaking
Tue. Apr 30th, 2024

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு தீர்வு காணுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அடிப்படை பொருட்களின் விலையேற்றம் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு தற்போதைய நிலவரம் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோன்று, பொதுமக்கள் அதிக வாழ்க்கைச் செலவைச் சுமப்பதால் அனைத்து செலவுகளையும் குறைக்குமாறு ஜனாதிபதி இதன்போது அமைச்சர்களுக்கும் பணிப்புரை விடுத்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்ற விவகாரத்தில் அமைச்சர் பசிலுக்கு எந்த மாற்று வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய புதிய முறைகளைக் கொண்டு வாருங்கள் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் உயரும் வாழ்க்கைச் செலவு குறித்த பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வையும் விரிவான விளக்கத்தை அளிக்கவும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *