பிரதான செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பால் இறக்குமதியாளர் சங்கத்தினால் விலை உயர்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் எடையுடைய பால் மா பக்கட் ஒன்றின் விலை 100 ரூபாவினால் உயர்த்தப்படும் அதேவேளை, இறக்குமதி செய்பய்படும் ஒரு கிலோகிராம் எடையுடைய பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் உயர்த்தப்படுகின்றது.

இதன்படி ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 1195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் விலை 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கான கட்டுப்பாட்டு விலையை நேற்றைய தினம் அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலம், நாட்டில் அண்மைய மாதங்களில் பால்மாவிற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

wpengine

எருக்கலம்பிட்டி விளையாட்டு போட்டி! பிரதம அதியான விக்னேஸ்வரன்

wpengine

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் மதுபோதை

wpengine