Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து வத்திக்கானில், விளக்கமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு படுகொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னேற்றம் குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

விரைவில் வத்திக்கானுக்கான திட்டமிடப்பட்ட விஜயத்தின் போது பிரதமர், இந்த விளக்கத்தை வழங்கவுள்ளார். பிரதமர் ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஆகியோரின் இத்தாலி விஜயத்தின் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு மற்றும் பிற இடங்களில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுடன் வெடிகுண்டு பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைத் தணிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பற்றிய விரிவான விளக்கத்தை அவர்கள் வழங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படுகொலையின் முழு விபரங்களையும், குண்டுவெடிப்பின் பின்னர் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் வத்திக்கானுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது என்றும் அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *