Breaking
Mon. Nov 25th, 2024

இரவு நேர ஊரடங்கு சட்டத்தை வௌவால்களுக்காகவா அல்லது ஆந்தைகளுக்காகவா அமுல்படுத்தியுள்ளீர்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வினவியுள்ளார். 

அத்துடன், ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்தை கேட்காமல், அவர்கள் நினைத்ததை போன்று ஆட்சி செய்ய முற்படுவார்களாயின் நமக்கென்று சுயமாக ஒரு ஆட்சியை நாமே உருவாக்கி கொள்வோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன், முடிந்தால் மாகாணசபை அல்லது பொதுத் தேர்தலை நடத்தி பாருங்கள் எத்தனை வாக்குகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள். மூன்றில் ஒன்றுகூட கிடைக்காது. நான் நினைகின்றேன், ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு நடந்ததுதான் நடக்கும் போல் தெரிகின்றது.

அன்று ஜே.ஆர்.ஜயவர்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலிலேயே அக்கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 8ஆக குறைந்தது.

இதற்கு பிரதான காரணம் மக்களின் கோரிக்கைக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை. அந்த நிலைமை தான் உங்களுக்கும் வரப்போகின்றது.

கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு கடந்த நாட்களில் சுகாதாரமற்ற ஒரு அமைச்சாகவே காணப்பட்டது.

பவித்ரா வன்னியாராச்சி செய்த வேலைகளை நாம் மறக்கமாட்டோம். அவர் நிறைய வேலைகள் செய்தார்.

இருந்தாலும் தலைவலிக்கு தலைவாணியை மாற்றியதை போல் அமைச்சரவையை மாற்றி இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

நீங்கள் பொறுப்பேற்றது ஒரு பெரிய குப்பை கிடங்கு. இந்த குப்பையை சுத்தம் செய்ய உங்களுக்கு திறமை இருக்க வேண்டும்.

அப்படி நீங்கள் சுத்தம் செய்யாவிட்டால் உங்களுக்கு இந்த பயணத்தை தொடர முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *