பிரதான செய்திகள்

அரச அலுவலகங்களில் அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும்

நாட்டில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பொன்றும் வெளியாகியுள்ளது.

அதன்படி அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்கீழ் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Related posts

வவுனியா,பட்டாணிச்சூர் பகுதியில் வாகன விபத்து! மூவர் வைத்தியசாலை

wpengine

முல்லைத்தீவு முஸ்லிம் குடியேற்றத்திற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு! றிஷாட்டுடன் கூட்டமைப்பு வாய்த்தர்க்கம்

wpengine

சமூகவலைத்தளத்தில் அரச உத்தியோகத்தர்களை விமர்சிக்க தடை

wpengine