நாட்டின் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆயிரம் மாகாண பாடசாலைகளில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் செயற்றிட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பதினைந்து பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பிரதிபலனாக மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மன்னார் கல்வி வலயத்தில் பத்திமா ம.ம.வி,எருக்கலப்பிட்டி ம.ம.வி,அரிப்பு றோ.க.த.க பாடசாலை,முருங்கன் ம.வி சென்.ஏன்ஸ் ம.வி நானாட்டான் டிலாசல் கல்லூரி ஆகிய ஆறு பாடசாலைகளும் மடுக்கல்வி வலயத்தில் அடம்பன்.ம.ம.வி,பெரிய பண்டிவிரிச்சான் ம.வி ஆகிய இரண்டு பாடசாலைகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்தில் மாங்குளம் ம.வி,ஒட்டுசுட்டான் ம.வி,யோகபுரம் ம.வி பாலிநகர் ம.வி.ஆகிய நான்கு பாடசாலைகளும் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி,உடையார்கட்டு ம.வி முல்லைத்தீவு ம.வி ஆகிய மூன்று பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் மேற்படி பாடசாலைகள் நேரடியாக தேசிய கல்வி அமைச்சின் கீழியங்குவதுடன் கூடிய வளங்களைப் பெற்று பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் சிறப்பான பங்களிப்பினை வழங்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தரமுயர்த்தப்பட்ட குறித்த பாடசாலைகளின் பெயர்களை மாற்றம் செய்து பெயர்ப்பலகைகள் இடுவதற்கு ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா கல்வியமைச்சால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊடகப்பிரிவு.