பிரதான செய்திகள்

தற்போது அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அதிகாரிகள் பணியாற்றுவதில்லை

நாட்டின் அரச இயந்திரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாகதால், முழு நாடும் வீழ்ச்சியடையும் முன்னர் உடனடியாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அரச நிர்வாகத்தில் அதிகமான பொறுப்புக்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்களே. தற்போது அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்து விட்டது. அதிகாரிகள் பணியாற்றுவதில்லை. உங்களிடம் பொறுப்புடன் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.

மக்கள் தொடர்பில் அனுபவமிக்க அறிவை கொண்டு எமது முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச அழைத்து இது குறித்து கலந்துரையாடுங்கள்.

அண்ணா நடந்துள்ளவற்றுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள். அண்ணன், தம்பிகளுக்கு இடையில் இது முடியாத விடயமல்ல.

அண்ணா எனக்கு ஆலோசனை வழங்கி இதனை செய்யுங்கள் என்று கேட்பது தவறில்லை என்றே நான் நினைக்கின்றேன். மகிந்த ராஜபக்சவுக்கு அதிகமான பொறுப்புக்களை கொடுங்கள்.

இதனை செய்ய தவறினால், நாடு வீழ்ச்சியடைந்து விடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்காற்றிய பௌத்த பிக்குமார்களில் முதன்மையாக இருந்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்கள் ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரிக்கை

wpengine

225 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்! ஒரு ரூபாய் கூட வாக்களித்த மக்களுக்கு தானம் செய்யவில்லை

wpengine

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash