பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா- திருநாவற்குளம் புகையிரத கடவையில் விபத்து; அதிகாரிகளின் கவனயீனமே காரணமென மக்கள் விசனம்!

வவுனியா – திருநாவற்குளம் புகையிரத கடவையினை மோட்டார்சைக்கிளில் நபர் ஒருவர் கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா விவசாய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள திருநாவற்குளம் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில், இன்று காலை 6.50 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிள் சேதமடைந்துள்ளதுடன் சாரதி படுகாயடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் 40 வயதுடைய நிசாகரன் என்ற ஆசிரியரே படுகாயமடைந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புகையிர நிலைய அதிகாரிகளுடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் டிஜிட்டல் தொழிநுட்ப ஒலி சமிச்சை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை பணியில் ஈடுபடுத்துமாறு அப்பகுதி மக்கள் பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வடக்கு,கிழக்கில் தனித்து போட்டி திலங்க சுமதிபால

wpengine

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine

இனவாதிகளின் கையாட்களாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி?மஹிந்த ராஜபக்ஷ

wpengine