பிரதான செய்திகள்

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மஹிந்தவுடன்,பசில், மைத்திரி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக மே தின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை

wpengine

சிங்கள இளைஞர்களின் “நைய்யாண்டி” மன்னாரில் பதட்டம்

wpengine

மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தரின் நியாயமற்ற இடமாற்றம்

wpengine