பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில், கோழி இறைச்சியின் விலை 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள்  தெரிவிக்கின்றனர்.

வெளியிடங்களில் அறுநூறு தொடக்கம் எழுநூறு ரூபாய் வரை கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் நிலையில்,  புதுக்குடியிருப்பு பொது சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் சந்தையில் கோழி இறைச்சி வாங்குவதை  மக்கள் தவிர்த்து வருவதாகவும்,  குறித்த சந்தையில் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் விலைகளை கண்காணிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு! சென்னையில் சுவரொட்டி

wpengine

நாட்டின் இன்றைய நிலைக்கு 20 க்கு கை தூக்கியோரும் பொறுப்புக் கூற வேண்டும் – இம்ரான் எம்.பி

wpengine

மார்க்க கடமையினை கூட உடைத்தெறிகின்ற சமுகமாக இருக்கின்றோம் -அமீர் அலி

wpengine