பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் தொற்று இல்லாதவர்களின் கடைகளைத் திறக்க அனுமதி!

யாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பிசிஆர்  பரிசோதனைகளின் அடிப்படையில்,  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின்  கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை, நாளை (08) முதல்  திறப்பதற்கு அனுமதி வழங்குவதாக,  யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 26ஆம் திகதி முதல் யாழ். நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதாகவும், அந்த வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்படனரெனவும் கூறினார்.

இந்நிலையில், கடந்த 14 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில், தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை, நாளைக் காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

நேற்று (06), அவசரமாக கூடிய யாழ். மாவட்டக் கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தற்போது பண்டிகை காலம் என்பதால், மக்கள் வழமை போன்று ஒன்றுகூடல்  செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

Related posts

பண்டாரவெளி காணி விடயத்தில் வெள்ளிமலை மக்களை மாவட்ட செயலகத்தில் கேவலமாக பேசிய கேதீஸ்வரன்! கிராம மக்கள் விசனம்

wpengine

அமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடை

wpengine

ரணில்,சஜித் தலைமையில் இன்று சிறிகொத்தாவில் கூட்டம்.

wpengine