மட்டக்களப்பு, காத்தான்குடி பிரசேத்தில் சந்தேக நபர்கள் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்கள் கடந்த நவம்பர் 21ஆம் திகதி கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 பேர் அடங்கிய குழுவின் மிகுதி இருவர் என அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
இவர்கள் திஹாரி மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்த 31 மற்றும் 32 வயதுடையவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கத்தாரில் இருந்து ‘வன் உம்மா’ என்ற வட்ஸ்அப் குழு ஒன்றை நிறுவி, அதன் ஊடாக அடிப்படைவாதக் கருத்துக்கள் மற்றும் போதனை காணொளிகளை வெளியிட்டுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க உத்தரவு பெற்று, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.