Breaking
Mon. Nov 25th, 2024

சர்வதேசத்தை பகைத்துக் கொள்வது இலங்கையின் முன்னேற்றத்திற்கு பாரிய தடவையாக அமையும் என முன்னாள் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா மற்றும் எரித்திரியா போன்று செயற்பட முடியாது. காரணம் மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.  அதனை ஏற்றுக் கொண்டுள்ளதால் வடகொரியா, எரித்திரியா போன்று செயற்பட நினைக்க முடியாது. 

தற்போதைய அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. அதன்மீது நம்பிக்கை வைக்கக்கூடாது. இதுவே முதல்கட்ட நடவடிக்கையாக காணப்படவேண்டும். இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அனைத்து வகையான தீர்வுகளையும் காண முடியும். 

விமர்சிப்பவர்களை எதிரியாக கருதி குற்றம்சாட்டினால் இலங்கை எதனையும் சாதிக்க முடியாது. உலகை சமநிலையோடு அணுகிய நாடு இலங்கை.  உலகம் எங்களை நேசிக்கின்றது. எங்களது ஆட்சிக்காலத்தின் நான்கு வருடங்களும் உலகம் அவ்வாறே நடந்து கொண்டது. 

நாங்கள் அவர்களுடன் ஈடுபாட்டை காண்பிக்க ஆரம்பித்தால் அவர்கள் எந்த வழியில் சென்றாவது எமக்கு உதவ முன்வருவார்கள். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் காணப்படும் இந்த தருணத்தில் படுகுழியை நோக்கி விழக்கூடிய இந்த தருணத்தில் வெளிவிவகார உறவுகள் எமக்கு மிகவும் அவசியமானது. 

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதி செய்யவும் நாங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுத்தோம். காணாமல்போனவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை கொண்டுவந்தோம். உண்மை நீதி ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவை பத்திரம் தயாராகயிருந்தது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல கேள்விகளை கேட்டதால் அது தாமதமானது. 

மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்க முடியாது. ஆனால் நாடுகள் தனித்தனியாக தடைகளை விதிக்கலாம்.  உயர்மட்டம் எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என நான் எப்போதும் தெரிவித்துவந்துள்ளேன். பொதுமக்களை பாதிக்கும் தடைகளை விதிக்க வேண்டாம் என உலக நாடுகளை கேட்டுக்கொள்கிறேன்” என மங்கள சமரவீர தெரிவித்தார். 

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *