பிரதான செய்திகள்

வாய்கால் அமைக்க வழியில்லை எவ்வாறு பாலம் அமைப்பது? நாமல் (விடியோ)

இந்த அரசாங்கத்தால் ஒரு வாய்காலை கூட அமைக்க முடியாத நிலையில் எவ்வாறு இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

வெளிநாட்டு கடன்களை கட்டுப்படுத்துவதாக கூறி “வட்“ வரியை உயர்த்தியுள்ளது. மேலும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கப்போவதாக கூறுகின்றது. சர்வதேசத்திடம் இருந்து 1085 பில்லியன் ரூபாவை கடனாக பெற்ற இந்த அரசாங்கத்தால் எவ்வித பாலமோ அல்லது வாய்க்காலோ அமைத்ததாக தெரியவில்லை.

மேலும் கிருலப்பனையில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. அம்பாந்தோட்டையில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கின்றோம். அவர்களுக்கு நாம் உதவுவதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைப் பற்றி கதைத்துகொண்டிருக்கின்றதே தவிர நடைமுறையில் ஒன்றையும் செய்வதில்லை என்றார்.

Related posts

இனவாதத்தை தடுக்க சாணக்கிய தலைவர் ஹக்கீம் எடுத்த காத்திரமான நடவடிக்கை என்ன?

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட! வீட்டு திட்ட பயனாளிகள்

wpengine

சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பழைய விலையில்

wpengine