பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

நுண்நிதி கடனை நிறுத்தக் கோரி முல்லைத்தீவில் இன்று (30) காலை கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், முல்லைத்தீவில், இன்று வெவ்வேறு அமைப்பினரின் ஏற்பாட்டில் 2  கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, நுண்நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்களால் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலிலும்,  வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், யுவசக்தி பெண்ககள் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு நகரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் ஒன்றுதிரண்ட மக்கள்,  அங்கிருந்து பேரணியாக புதுக்கடியிருப்பு நகரை வந்தடைந்து,   கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், நுண்நிதி கடன் தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பில், துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

நுண்நிதி கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 08ஆம் திகதியன்று, ஹிங்குராங்கொடவில் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்துக்கு ஆதராவக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கழிவறையுடன் சிங்கப்பூர் சென்ற வட கொரிய அதிபர்

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை! ஒரு வார காலக்கெடு இல்லை ஹர்த்தால்

wpengine

5000 ரூபா பணம் வழங்க சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

wpengine