பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் இராணுவ வாகனம் மோதியதில் பலி!

இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (27) உயிரிழந்தார். 

இம்மாதம்  20ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது  யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்துக்கு  அண்மையில் படையினரின் வாகனம் இவரை மோதியது. தலையில் காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Related posts

சுதாகரனின் விடுதலை கோரி மன்னார் மாவட்ட செயலகத்தில் மகஜர்

wpengine

12 மில்லியன் மின்சாரக் கட்டணம் நிலுவையில் உள்ள அமைச்சர்! வெள்ளவத்தையில் சண்டித்தனம்.

wpengine

றியாஜ் பதியுத்தீன் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர் நீதிமன்றத்தில்

wpengine