பிரதான செய்திகள்

பாலர் பாடசாலை ஆசிரியர்கள் கொடுப்பனவு! அரசு கவனம்

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

அதன் வரைபு ஏற்கனவே கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்பள்ளி கல்வி நடவடிக்கைகளை முறை சார்ந்ததாக மேற்கொள்ளும் தேசிய கொள்கையொன்று இதுவரையிலும் இருந்ததில்லை. எனவே முறை சார்ந்த கொள்கையானது நிபுணர் குழுவொன்றின் மூலம் வகுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்துப் பாலர் பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்படும். அதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. முன்பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே வகுத்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து முன்பள்ளிப் பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் பல ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் குறைந்தது தரமான பாலர் பாடசாலையொன்றையாவது ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அவை சர்வதேச தரத்திற்கமைவாக நடத்தப்படும்.

மேலும், பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

துறவிகளால் ஆரம்ப நிலையிலுள்ள சிறுவர் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

ஆணைக்குழுவின் மூலம் பல்கலைகழகம் சென்ற மன்னார் மாணவன்

wpengine

வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி என்று அச்சுறுத்தும் அரசாங்கம்: விவசாய அமைப்புகள் கண்டனம்.

Maash