Breaking
Tue. Dec 3rd, 2024

இன்று எமது நாட்டைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற கூட்டம் கூடினால் அதிகமாக பேசப்படுவது இன ரீதியான மத ரீதியான பிரச்சினைகளை மாத்திரம்தான் ஆனால் அவைகளை தாண்டி இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கு குறைந்த சம்பளம் பெறுவோருக்கு இன்றைய விலைவாசி ஓர் பேரிடியாய் அமைந்துள்ளது நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒரு கூலித் தொழிலாளியின் நிலை மூன்று நேர உணவை சரியான முறையில் உண்ண முடியாத ஒரு நிலை தான் முன்னைய காலங்களிலே குறிப்பாக 15 வருடங்களுக்கு முன்னால் ஒரு ஏழை குடும்பத்தின் உணவாக சோறும் சம்பலும் காணப்பட்டது.

இன்று அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை குறைந்தது 80 ரூபாய் இவை இரண்டுக்கும் மாத்திரம் 270 ரூபாய்கள் தேவைப்படுகின்றன இதை நாங்கள் சரியான முறையில் பார்த்தோமானால் இது இன்று ஒரு பணக்கார உணவாகவே மாறி இருக்கிறது அந்த அளவுக்கு எமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

எனவே நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது இனரீதியான பிரச்சினைகளை மாத்திரம் பேசுவதை நிறுத்திவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்குரிய விடயங்களையும் பேசுங்கள் வெறும் அரசியலை மாத்திரம் உங்கள் நோக்கமாக கொண்டு நடக்க வேண்டாம் அரசியல் கடந்த பல பிரச்சனைகளில் மக்கள் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது என்று அரசு அறிவிக்கின்றது ஆனால் அந்த பொருட்களை வாங்க கடைக்குச் சென்றாள் அவர்கள் குறிப்பிட்ட அந்த பொருட்கள் இருப்பதில்லை அதுமட்டுமல்லாமல் வெங்காயத்திற்கு ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டால் அங்கு சமையல் எரிவாயு க்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது ஏதோ ஒரு வகையில் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு மக்களின் தேவைக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை.

பணபலம் கொண்டவர்களுக்கு இந்த விலை உயர்வின் தாக்கம் தெரிவதில்லை ஆனால் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் ஒரு கூலி அவனுடைய வருமானத்தின் மூலம் தனது குடும்பத்தை கொண்டு செல்வது பாரிய ஒரு சவாலாக இன்று காணப்படுகிறது எனவே இனவாதத்தை மாத்திரம் நீங்கள் கண்கொண்டு பாராமல் மக்களின் தேவைகளையும் சற்று பாராளுமன்றத்தில் முன்வையுங்கள் இதை நான் எந்த பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது கட்சியையோ நான் குறிப்பிட்டுக் கூறவில்லை பொதுவாக இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *