பிரதான செய்திகள்

பசிலுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளியாக வேண்டாம்.

பசில் ராஜபவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப் தெரிவித்தார்.

கொழும்பில் வைத்து இன்று (19) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே, இவ்வாறு தெரிவித்தார் 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளியிடுகின்ற கருத்துகளை பார்த்தால் கவலையாக உள்ளது. இவர்கள் ஏன் இவ்வாறு பேசுகிறார்கள் என ஆராய்ந்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“அதிலும் ஒருவர், பசில் ராஜபக்ஷ சிறுபான்மை சமூகத்துக்குப் பொருத்தமானவர். அவர், இனவாதம் அற்றவர், எமது உரிமைகளை பெற்றுத்தருவார் எனக் கூறி திரிகிறார். 

“ஜனாஸா எரிப்பு முதல் இப்பொழுது பேசப்படும் நிகாப், மத்ரஸா தடை என முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நடைபெற்ற, பேசப்படும் போதெல்லாம் பசில் ராஜபக்ஷ எதிர்க்கட்சியிலா உள்ளார். அவர்தான் இந்த அரசை வழிநடத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆகவே, பசில் ராஜபக்ஷவுக்காக நீங்கள் மக்கள் முன் கோமாளிகளாக மாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார். 

Related posts

மறிச்சுக்கட்டி மக்களின் 16வது நாள் போராட்டம்! மன்னார் ஆயர் உட்பட மத தலைவர்கள் பங்கேற்பு

wpengine

ஜூலை மாத அஸ்வெசும கொடுப்பனவு – நாளை வங்கிக் கணக்கில்.

Maash

அரசியலில் மஹிந்த ஒய்வு!மீண்டும் அரசியலுக்கு வரும் பசில்

wpengine