பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்

வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். எனினும் பிறந்த குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

கடந்த காலத்தில் தாயின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த குறித்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் காவல்துறையினரிின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது.

இதன்போது குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை புதைத்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாய், தான் குழந்தையை பிரசவிக்கவில்லை என தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தாயாரை காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். குறித்த தாய் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் அடிமையானவர்களை மீட்க பிரத்தியோக மருத்துவமனை

wpengine

முசலி,கொண்டச்சி கிராமத்திற்கான குடிநீர் திட்டம்! முசலி செயலாளர் ஆரம்பித்தார்.

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine