Breaking
Mon. Nov 25th, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது ரிஷாட் பதியுதீனும் ஹிஸ்புல்லாஹ்வுமே என்றும் பயங்கரவாதிகளை பாதுகாத்தவர் முஜிபுர் ரஹ்மான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நீதி அமைச்சராக நான் இருந்த போது, ‘அடிப்படைவாத மதபோதகர்கள் 500 பேர் நாட்டுக்கு வருகை தந்து, நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்’ என்று பொறுப்புடன் கூறினேன். அப்போது, எங்கள் நாட்டில் எந்தவொரு பயங்கரவாதியோ அடிப்படைவாதியோ இல்லையென்று பாராளுமன்றில் முழங்கிய, ஹிஸ்புல்லாஹ், ரிஷாட் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான், ராஜித்த சேனாரத்ன ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வாழ்க்கைக்கு இப்போது பொறுப்புக் கூற முடியுமா? என்று நாம் கேட்கிறோம்.

கடந்த பாராளுமன்றில் முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள் 17 பேர் அடங்கிய குழுவினர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், விஜயதாஸ ராஜபக்ஷவை நீதியமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும், இல்லை என்றால் தாங்கள் அரசிலிருந்து வெளியேறுவோம் என்றும் அழுத்தம் கொடுத்தனர். முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயத்தின் காரணமாக, ரணில் விக்கிரமசிங்க அடிப்படைவாத, இனவாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, என்னை நீதி அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியவர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லாஹ் என்று நான் இப்போதும் கூறுகின்றேன். அத்துடன், இந்த பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பளித்தவர் முஜிபுர் ரஹ்மான் என்றும் நான் கூறுகின்றேன். அதேபோன்று, அன்று பயங்கரவாதிகளுக்காக பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தவர் அசாத் சாலி என்றும் நான் தெரிவிக்கின்றேன்.
அப்படியாயின் இதனை விசாரிப்பதில் பொலிசாருக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது? இதனை புரிந்துகொள்ளக் கூடிய ஒரு அதிகாரியேனும் காவல்துறையில் இல்லையா?”

அதனால், பொலிஸாருக்கு விசாரணை செய்ய வேண்டிய ஒன்றும் இல்லை எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் விஜயதாஸ கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *